விஜய்க்கு போட்டியாக புறப்பட்ட அவரது தந்தை..!

இளைய தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனரும் தற்போது நடிகராக அவதாரம் எடுத்திருப்பவருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது ‘நையப்புடை’ என்கிற படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஹீரோ இவர் தான். இன்னொரு துணை ஹீரோவாக பா.விஜய் நடித்துள்ளார் என்று வேண்டுமானால் சொல்லலாம். கலைப்புலி தாணு இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப்படத்தை இயக்கியுள்ளவர் 19 வயதே ஆன விஜய் கிரண் என்பவர்.. இந்தப்படத்தில் 73 வயதான எஸ்.ஏ.சியை ஆக்சன், டான்ஸ், காமெடி. சேசிங் என ஒரு இளைஞனுக்குண்டான அத்தனை வேலைகளையும் வாங்கியிருக்கிறாராம்..

இதை படப்பிடிப்பில் பார்த்த பலரும் விஜய் வீட்டில் அவருக்கு எதிராக இன்னொரு ஹீரோ கிளம்பிட்டாருப்பா என்றும், இனி அமிதாப்பச்சன்-அபிஷேக் பச்சன் நடிப்பது போன்ற கதைகள் இருந்தால் இவர்கள் இருவரை வைத்தே படத்தை எடுக்கலாம் என ஆச்சர்யப்படுகிறார்களாம்.