பொதுவாக சினிமா சம்பந்தப்பட்ட விழா மேடைகளில் குட்டிக்கதை சொல்வது ரஜினியின் பாலிஸி.. இப்போது ரஜினியின் இடத்தை நோக்கி முன்னேறுவதாலோ என்னவோ, அதிகம் பேசவே கூச்சப்படுகின்ற விஜய் சில நேற்று முன்தினம் நடைபெற்ற தனது ‘தெறி’ ஆடியோ விழாவில் குட்டிக்கதை ஒன்றை எடுத்துவிட்டார்.
நல்ல கதை தான்.. ஆனால் பேச்சுவாக்கில் அந்தக்கதையில் சீன தலைவரான மாவோவை ரஷ்ய தலைவர் என குறிப்பிட்டு விட்டார்.. ஆனால் விழா முடிந்தபின் சோஷியல் மீடியாவிலும் இணையதளங்களிலும் நேற்று முழுவதும் இதுதான் வைரலானது. இது விஜய்யின் கவனத்துக்கும் போனது..
“பெரிய மேடைகளில் நாம் சில கருத்துக்களை ரசிகர்களுக்காக சொல்லும் போது இந்த மாதிரியான தவறுகள் நடந்து விடுகின்றன இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன் மற்றபடி நான் சொன்ன கருத்து ரசிகர்களை சென்றடையும் என நம்புகிறேன்” என வருத்தம் தெரிவித்துள்ளார் விஜய்..
சொன்னது தவறு என்று தெரிந்ததும் வருத்தம் தெரிவித்துள்ள விஜய்யின் குணம் பாராட்டத்தக்கது என பலரும் பாரட்டுக்களை தெரிவித்துள்ளார்கள்.