அரசவை மண்டபத்திற்குள் நுழைய வேண்டும் என்றால் வாயிலில் நிற்கும் காவலர்களை கடந்துசென்றால் தானே அரசனை சந்திக்க முடியும்..? இனிமே இப்படித்தான் என்கிற ரீதியில் தன்னை சந்தித்து கதைசொல்ல வருபவர்களுக்கு புதிதாக செக்போஸ்ட் ஒன்றை போட்டுள்ளாராம் விஜய் சேதுபதி.
காரணம் தொடர்ச்சியாக அவரது படங்கள் சரியாக போகாத நிலையில், கடைசியாக வெளியான நானும் ரவுடி தான் படம் அவரது மார்க்கெட்டை மீண்டும் தூக்கி பிடித்துள்ளது.. இதை மீண்டும் சரியவிடாமல் தடுக்கவேண்டும் என்பதால் கதை தேர்வில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளாராம் சேதுபதி.
அதனால் கதை இலாகா என்கிற குழுவை உருவாக்கியுள்ளாராம்.. அதற்காக இந்த குழுதான் இவருக்கு கதை ரெடி பண்ணும் என நினைத்துவிட வேண்டாம். விஜய்சேதுபதிக்கு கதைசொல்ல வருபவர்கள் இந்த குழுவிடம் தங்களது கதையை சொல்லி ஒகே பண்ணினால் தான் அடுத்து நடிகரை சந்திக்க முடியுமாம். இந்த முடிவு சரியோ தப்போ, நமக்கு நல்ல படம் கிடைத்தால் சரிதான்.