விஜய்யை அதிரவைத்த மகேஷ்பாபுவின் அந்த ஒரு வார்த்தை..!


சில ஹீரோக்களுக்கு பட்டங்கள் தானாக தேடிவரும்.. சில ஹீரோக்கள் பட்டங்களை போடச்சொல்லி ரசிகர்களை உசுப்பேற்றி விட்டு சைலன்ட் ஆக இருந்துகொள்வார்கள்.. விஜய்க்கு இளையதளபதி பட்டம் போட்டதே கொஞ்சம் ஓவர் தான் என சொல்லப்பட்டு வந்து, சரி போனால் போகிறது என சமீபகாலமாகத்தான் அதை யாரும் பெரிதுபடுத்தாமல் இருந்து வருகிறார்கள். ஆனால் இப்போது ‘மெர்சல்’ படத்தில் தளபதி என அந்தப்பட்டத்தை மாற்றி புரமோஷன் கொடுத்துள்ளார் இயக்குனர் அட்லி.

இந்த சூழ்நிலையில் தான் தெலுங்கு சூப்பர்ஸ்டார், ஆந்திர சினிமாவின் இளவரசன் என அழைக்கப்படும் மகேஷ்பாபு முதன்முறையாக ‘ஸ்பைடர்’ படம் மூலம் தமிழ்சினிமாவில் நேரடியாக களம் இறங்குகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப்படம் வரும் செப்-27ஆம் தேதி ரிலீசாகிறது. இதனையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தனர் ‘ஸ்பைடர்’ படக்குழுவினர்.

இந்த நிகழ்வில் மகேஷ்பாபுவிடம், “தெலுங்கில் உங்களை சூப்பர்ஸ்டார், பிரின்ஸ் என பட்டம் கொடுத்து அழைக்கும்போது, தமிழில் அதை வேண்டாம் என சொல்லிவிட்டீர்களாமே என கேட்டதற்கு, அங்கேயும் கூட பட்டம் போடவேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறேன்” என கூலாக பதில் சொன்னார் மகேஷ்பாபு.

பட்டமே வேண்டாம் என மகேஷ்பாபு சொன்னது விஜய் தரப்பில் சற்றே சலசலப்பை ஏற்படுத்தவே செய்திருக்கிறதாம்.