விஜயை பழிவாங்கவே ‘தெறி’யை பன்னீர் செல்வம் வெளியிடவில்லை!

கடந்த விழாயன் அன்று உலகமெங்கும் வெளியான விஜய் நடித்துள்ள ‘தெறி’ செங்கல்பட்டு & திருவள்ளுவர் ஏரியாகளில் வெளியாகவில்லை.

10 முதல் 12 கோடி வரை ‘மினிமம் கியாரண்டி’ எங்களிடம் தாணு அவர்கள் கேட்பதால் தான் எங்களால் படத்தை திரையிட முடியவில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் பன்னீர் செல்வம் குற்றம் சாட்டினார். சென்னையில் மட்டும் சதவீத அடிப்படையில் திரையிடும் தாணு எங்களிடம் மட்டும் ‘மினிமம் கியாரண்டி’ கேட்பதேன் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இன்று தாணு அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

‘தெறி’ படமானது உலகமெங்கும் வெளியாகி தனக்கு கோடிகளில் குவிப்பதாகவும் இந்த படத்தினை வெளியிடுடாததால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தான் நஷ்டம் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் எனக்கும் செங்கல்பட்டு ஏரியா உரிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் கடந்த 6-ஆம் தேதியே தெறி படத்தின் செங்கல்பட்டு உரிமையை “SPI சினிமாஸ்” நிறுவனத்திற்கு விட்டு விட்டேன். இதோ அவர்கள் எனக்கு கொடுத்த “DD” என காண்பித்தார்.

தொடர்ந்து சென்னையில் உள்ள தியேட்டர்களில் சதவீத அடிப்படையில் திரையிட்டாலும் அவர்கள் சரியாக கணக்குகளை ஒப்படைக்கின்றனர். ஆனால் செங்கல்பட்டு ஏரியாவில் சதவீத அடிப்படையில் திரையிட்டால் அவர்கள் சரியான கணக்குகளை ஒப்படைப்பதில்லை. அதனால்தான் ‘SPI சினிமாஸ்’ அவர்களிடம் ‘மினிமம் கியாரண்டி’ கேட்டுள்ளனர்.

நாங்கள் 100 கோடி ரூபாய் வரை செலவிட்டு படம் எடுத்துவிட்டு, நாங்கள் போட்ட பணத்தை திருப்பி எடுக்க இது போன்ற பெரிய படங்களுக்கு ‘மினிமம் கியாரண்டி’ தான் எங்களுக்கு சிறந்தது. நான் ஏற்கனவே வெளியிட்ட ‘கணிதன்’ திரைப்படத்திற்கு இன்று வரை சதவீத அடிப்படையில் திரையிட்ட செங்கல்பட்டு தியட்டர்கள் பணம் கொடுக்கவில்லை.

‘பன்னீர் செல்வம்’ குடும்ப திருமண நிகழ்ச்சிக்கு விஜய் வரவில்லை என்பதால் விஜயை பழிவாங்கவே பன்னீர் செல்வம் தெறி படத்தினை திரையிட மறுத்து வருகிறார், இது தெரியாமல் அவருடன் இருப்பவர்களும் படத்தை திரையிட முடியாமல் நஷ்டம் அடைகின்றனர் என தாணு தெரிவித்தார்.