மெர்சல் படத்தில் மத்திய அரசை எதிர்த்து வசனங்கள் பேசியதாக விஜய் மீது பாஜகவினர் தாக்குதல் தொடங்கி ஒரு வழியாக இப்போதுதான் முடிவுக்கு வந்துள்ளது. அந்த விஷயத்தில் விஜய் கிறித்துவர் என சொல்லி அவர் மீது மதச்சாயம் பூசப்பட்டது.. ஆனால் ரஜினியின் மீது கன்னடர் என மொழி சாயம் பூசப்பட்டபோது, நான் பச்சைத்தமிழன் என அவர் ஓங்கி முழக்கமிட்டது போல இந்த விவகாரத்தில் விஜய்யால் பேச முடியவில்லை.. அல்லது பேச விரும்பவில்லையோ என்னவோ..?
அதனால் தான் மெர்சல்’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து அனுப்பியிருந்த கடிதம் கூட ஜோசப் விஜய் என பழைய லெட்டர்பேடில் தான் இருந்தது. இதை வெறும் வெள்ளைத்தாளில் விஜய்யின் பி.ஆர்.ஓ மூலமாக ஒரு செய்தியாக அனுப்பியிருந்தால் கூட போதுமானது.. ஆனால் மீண்டும் தன்னை கிறித்துவர் என்றே அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார் விஜய்.
ஆனால் இதில் அவரது மனைவி சங்கீதாவுக்கு துளியும் உடன்பாடில்லையாம். வழிபாடு, மத நம்பிக்கை எல்லாம் நம் வீட்டோடு இருக்கட்டும்.. ரசிகர்களை பொறுத்தவரை நீங்கள் விஜய் என்கிற பொதுவானவர். யாரோ உங்களை சீண்டினால் பதிலுக்கு நீங்களும் இப்படித்தான் அவசரப்பட்டு தவறு செய்வதா..? இனி இதுபோன்று செய்யாதீர்கள் என கோபமுகம் காட்ட விஜய்யே ஆடிப்போய்விட்டாராம்.