மோட்டார் வாகன ஆய்வாளராக மாறும் விஜய்சேதுபதி

ரஜினி, கமலுக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் நடிக்கும் பான் இந்திய நடிகராக மாறிவருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. அந்தவகையில் கடந்த வருடம் மலையாளம் (மார்க்கோனி மத்தாய்) மற்றும் தெலுங்கில் (சைரா நரசிம்ம ரெட்டி) நடித்த இவர், தற்போது உப்பென்னா என்கிற கன்னட படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதுதவிர இந்த வருடம் இந்தியிலும் இரண்டு படங்களில் நடிக்கிறார்

சமீபத்தில் தெலுங்கில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான உப்பென்னா படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. குறிப்பாக மாஸ்டர், உப்பென்னா ஆகிய படங்களின் மூலம் தெலுங்கு ரசிகர்களுக்கு நெருக்கமாகவே மாறியுள்ளார் விஜய்சேதுபதி. இந்தநிலையில் தெலுங்கில் ரவிதேஜாவும் விஜய்சேதுபதியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ‘ட்ரைவிங் லைசென்ஸ்’ படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகிறது.

கடந்த 2019ல் மலையாளத்தில் பிரித்விராஜ் மற்றும் தேசியவிருது பெற்ற நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாராமுடு ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தான் ட்ரைவிங் லைசென்ஸ். அய்யப்பனும் கோசியும் புகழ் டைரக்டர் சாச்சி தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதி இருந்தார். பிரபல சினிமா ஹீரோவான பிரித்விராஜூக்கும் அவரது தீவிர ரசிகரான மோட்டார் வாகன அதிகாரி சுராஜ் வெஞ்சாராமுடுவுக்கும் எதிர்பாராமல் ஏற்படும் ஈகோ யுத்தத்தை மையமாக வைத்து இந்தப்படம் உருவாக்கி இருந்தது. இதில் பிரித்விராஜ் கேரக்டரில் ரவிதேஜாவும், மோட்டார் வாகன அதிகாரி கேரக்டரில் விஜய்சேதுபதியும் நடிக்க இருக்கிறார்களாம்