ஒரு வழியாக பின்னணியில் இருந்த சில பிரச்சனைகள் முடிந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்தப்படத்தை இயக்குபவர் ‘அரிமா நம்பி’ படத்தி இயக்கிய ஆனந்த் சங்கர். இந்தப்படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வாலும் பிந்துமாதவியும் நடிக்கின்றனர்.
முதலில் பிந்துமாதவி நடிக்க இருக்கும் கேரக்டரில் பிரியா ஆனந்த் நடிப்பதாகத்தான் படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர் முடிவு செய்து வைத்திருந்தாராம்.. காரணம் அவரது முதல் பட கதாநாயகி என்பதுடன் தனது முதல் வெற்றிப்படத்தில் உடன் இருந்தாரே என்கிற சென்டிமென்ட்டும் வேறு.
அதுமட்டுமல்ல அரிமா நம்பி பட ரிலீஸ் நேரத்திலேயே பிரியா ஆனந்தை மீட்டருக்கு அதிகமாகவே புகழ்ந்து வந்தார் ஆனந்த் சங்கர். அதனால் விக்ரம் படத்தில் தனக்கு வாய்ப்பு நிச்சயம் என நம்பி வந்தார் பிரியா ஆனந்த். ஆனால் அடுத்து பிரியா ஆனந்த் நடித்த படங்கள் அத்தனையும் பிளாப்…
அதனால் ராசியில்லாத நடிகை நம்ம படத்துக்கு வேண்டாம் என விக்ரம் பட தயாரிப்பாளர்கள் தயங்கியுள்ளார்கள். அதுமட்டுமல்ல, எல்லா படங்களிலும் அவரது நடிப்பு(?) ஒரே மாதிரியாக இருப்பதாகவும் அவரது முகம் கூட கிழட்டு தட்டியது போல தெரிவதாகவும் நினைத்த விக்ரம் ஆரம்பத்திலேயே பிரியா ஆனந்த் வேண்டாமென தடைபோட்டுவிட்டார்.
அதன்பின்னர் தான் அந்த கேரக்டரில் நடிக்க பிந்துமாதவி ஒப்பந்தமானார். ஆனால் கைவசம் படம் எதுவும் இல்லாத பிரியா ஆனந்தோ கால்ஷீட் இல்லை, தேதிகள் செட்டாகவில்லை அதனால் விக்ரம் படத்தில் நடிக்கவில்லை என பார்ப்பவர்களிடம் பீலா விட்டு வருகிறாராம்.