பெரும்பாலான சினிமா பிரபலங்களின் வாரிசுகளுக்கு அவர்கள் பிறக்கும்போதே சீமான்களாக பிறப்பதாலோ என்னவோ தங்களை தேவலோகத்தில் இருந்து வந்தவர்கள் போலவே நினைத்துக்கொள்வது தான் வழக்கம்.. அதனால் தான் தனி பார்ட்டி, கேர்ள் பிராண்டுகளுடன் ஊர் சுற்றுவது, விலை உயர்ந்த காரில் மின்னல் வேகத்தில் பறப்பது எல்லாமே தாங்கள் பண்ணியே ஆகவேண்டிய சாகசங்கள் என அவர்கள் நினைத்துக்கொள்வதில் ஆச்சர்யம் இல்லை.
இதில் நடிகர் விக்ரமின் மகன் துருவவும் விதிவிலக்கல்ல என்பதை தற்போது நிரூபித்துள்ளார். நடிகர் விக்ரமின் மகன் துருவ், தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் கமிஷ்னர் இல்லம் அருகே அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், அங்கிருந்த 3 ஆட்டோக்கள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான காரில் துருவ் உள்பட 3 பேர் இருந்துள்ளனர். குடித்துவிட்டு மதுபோதையில் கார் ஓட்டியதே இந்த விபத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல விபத்து ஏற்படுத்தி விட்டு கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் நிற்காமல் வேறு சென்றுள்ளார் துருவ் இது ஆரம்ப நிலை.. இப்போதே சுதாரித்துக்கொண்டு விக்ரம் தனது மகனை முறைப்படுத்தி சரியான பாதைக்கு திருப்பாவிட்டால் பின் நிலைமை கைமீறி போவதை தவிர்க்க முடியாது என்கிறார்கள் விக்ரமின் அபிமான ரசிகர்களே..