“லட்சுமிகரமான பெண்ணை திருமணம் செய்வேன்” ; மீண்டும் பற்ற வைத்த விஷால்..!


சினிமா பிரச்சனைகள் தவிர்த்து தனது திருமண பேச்சையும் அவ்வப்போது கரண்ட்டில் வைத்திருக்கவே விரும்புகிறார் விஷால்.. அதன் வெளிப்பாடுதான் இன்று நடைபெற்ற ‘துப்பறிவாளன்’ பட டீசர் வெளியீட்டு விழாவில் கூட தனது திருமணப்பேச்சு பற்றி அவர் கூறியதும் கூட..

அதில் ஒரு சின்ன க்லூவுடன் அவர் சொன்ன விஷயம் தான் இந்த செய்தியை எழுதவே காராணம்.. “நான் காமராஜர் அய்யா அவர்களின் வழியில் நடப்பேன் ஆனால் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். லட்சுமிகரமான பெண்ணை கண்டிப்பாக விரைவில் திருமணம் செய்வேன்” என கூறியுள்ளார் விஷால்.. திருமணத்தை பற்றி சாதாரணமாக அவர் கூறியிருக்கலாம். ஆனால் ‘லட்சுமிகரமான’ என்கிற வாரத்தையை எக்ஸ்ட்ராவாக சேர்த்துள்ளது தான் மீண்டும் யூகங்களுக்கு திரி கொளுத்தியுள்ளது.

விஷாலின் திருமணப்பேச்சு பற்றிய கேள்வி எழும்போதெல்லாம் தான் லவ் பண்ணுகிறேன் என்பதை மட்டும் கோடிட்டு காட்டியிருக்கிறாரே தவிர, அது யார் என்று இன்னும் சொன்னதே இல்லை.. லட்சுமி மேனன், வரலட்சுமி இந்த இருவரில் ஒருவரைத்தான் இவர் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என கிசுகிசுக்கப்பட்டது உண்டு..

இதில் வரலட்சுமியுடன் அவர் வெளிப்படையாக நட்பு பாராட்டி, ஒன்றாக ஜோடிபோட்டு ஊரைச்சுற்றியது நாம் அறிந்த விஷயம் தான். அதேசமயம் லட்சுமி மேனனுடன் இரண்டு படங்களில் நடித்தாலும் கூட அவருடனான நட்பை அவ்வளவாக வெளிக்காட்டியதில்லை விஷால்.

அதற்கேற்ற மாதிரி ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் க்ளைமாக்ஸில் கெஸ்ட் ரோலில் வரும் விஷால் தனது மனைவியிடம் போனில் பேசும்போது லட்சுமிக்குட்டி என கொஞ்சுவார்.. ஆக இதில் இறுதிப்பட்டியலில் இந்த இரண்டு லட்சுமிகள் தான் சந்தேக லிஸ்ட்டில் உள்ளனர்.