ரசிகர்கள் உட்பட, திரையுலகை சேர்ந்தவர்கள் அனைவருமே விஷாலின் திருமணம் எப்போது என்கிற கேள்விக்குறியுடன் நாட்களை கடத்திக்கொண்டு இருக்க, விஷாலுக்கு இன்னும் மூன்று வருடங்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பில்லை என சூசகமாக சொல்லியிருக்கிறார் நடிகர் பொன்வண்ணன்..
இத்தனைக்கும் விஷாலின் வீட்டில் காலான கலை கட்ட ஆரம்பித்துவிட்டாலும் கூட, அது அவரது தங்கையின் திருமணம் தானம்.. விஷாலை பொறுத்தவரை அவர் யாரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்பது வேண்டுமானால் ட்விஸ்ட்டாக் இருக்கலாம்.
ஆனால் நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடித்து அதில் தான் தனது திருமணத்தையும் நடத்துவேன் என திட்டவட்டமாக கூறிவருகிறார்.. சமீபத்தில் நடிபெர்ற பொதுக்குழுவில் இந்த கட்டடம் பற்றி பேசிய பொன்வண்ணன், அதை கட்டி முடிக்க குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகிவிடும் என்று கூறியுள்ளார்..
அப்போ விஷாலுக்கு இன்னும் மூன்று வருஷத்துக்கு கல்யாண பேச்சே இருக்காது தானே..? அட என்ன ஒரு கண்டுபிடிப்பு என திட்டவேண்டாம்.. கல்யாண பேச்சுக்குத்தான் வேலையில்லை.. யாரை கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறார் என்பது பற்றி பேச தடை இருக்கா என்ன..? கல்யாண நேரத்தில் விஷாலிடம் இருந்து ஏதாவது ட்விஸ்ட்டை எதிர்பார்க்கலாம்.