நடிகர் சங்க தலைவர் சரத்குமார் இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடினார். சரத்குமாருக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த்தனர். அரசியலோ சினிமாவோ தலைமை பொறுப்புகளில் எதிர் எதிராக இருந்தாலும் நல்லதுக்கு வாழ்த்துச்சொல்லவும் துக்கத்தில் பங்கெடுப்பதும் தான் நாகரிகம்.. பண்பு..
அந்தவகையில் நடிகர் விஷாலும், தனது டுவிட்டர் பக்கத்தில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் சரத் சார், இன்னும் நிறைய ஆண்டுகள் நீங்கள் நலமாக வாழ கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” என்று சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் அணிக்கு எதிராக விஷால் அணி களமிறங்கியிருந்தாலும், நட்பு பாராட்டும் பொருட்டு, சரத்குமாருக்கு, விஷால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதை பலரும் நல்ல ஒரு செயலாகவே பார்க்கிறார்கள்.
ஆனால் மற்ற நடிகர்கள் தெரிவித்த வாழ்த்துகளுக்கு, சரத்குமார் சார்பாக ராதிகா சரத்குமார் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஆனால், விஷாலின் வாழ்த்திற்கு மட்டும் ராதிகா நன்றி தெரிவிக்கவில்லை என்பது விஷால் மீது அவர் கொண்டிருக்கும் கோபத்தையே காட்டுகிறது.
அதுமட்டுமல்ல, இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்ற ‘உயிரே உயிரே’ பட இசை வெளியீட்டு விழாவின்போது விஷாலுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்குமாறு ராதிகா பேசியது குறிப்பிடத்தக்கது..