விஷால் அடித்த பல்டி ; அதிர்ச்சியில் தயாரிப்பாளர் தரப்பு..!


தயாரிப்பாளர் சங்கம் திருட்டு விசிடி விஷயத்தில் மெத்தனம் காட்டுகிறது. யாருக்கும் அக்கறை இல்லை. சும்மா கூடி பேசி போண்டா, பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு டீ குடித்து விட்டு போகிறார்கள்” என்று விஷால் காரசாரமாக பேட்டி கொடுத்ததும் உடனே ஆத்திரத்தில் இருந்த தயாரிப்பாளர் சங்கம் விஷாலை தயாரிப்பாளர் சங்கதிலிருந்து தற்காலிக நீக்கம் செய்ததும் நாம் அறிந்த விஷயங்கள் தான்.

இதை எதிர்த்து விஷால் நீதிமன்றம் சென்றார். வழக்கின் தீர்ப்பு விஷாலுக்கு சாதமாகத்தான் இருக்கும் என்பதும் அவருக்கு தெரியும்.. நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது “விஷால் வருத்தம் தெரிவித்தால் நீக்கம் குறித்து மறுபரிசீலனை செய்வதாக” கூறியது. நீதிமன்றமும் விஷால் தரப்பு கருத்தைக் கேட்டது..

விஷால் ரோசக்காரர், கோபக்காரர், மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டார் என்று நினைத்து தான் இப்படி ஒரு கருத்தை தயாரிப்பாளர் சங்கம் முன்வைத்து தப்பு கணக்கு போட்டது. ஆனால் விஷாலோ ‘நோ ப்ராப்ளம்’ என கூறி வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிடுவார் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை..

ஆனாலும் வருத்தம் தெரிவித்தால் நீக்கம் குறித்து பரிசீலிப்போம் என்றுதான் நீதிமன்றத்தில் ஒப்புக்கு சொல்லியிருந்தார்கள்.. இப்போது அவரது இடைநீக்கத்தை விலக்கித்தானே ஆகவேண்டும்.. அப்படி செய்யவில்லை என்றால் மற்ற தயாரிப்பாளர்கள் தரப்பில் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டும் தேவையில்லாமல் வாயை விட்டுவிட்டோமோ என புலம்புகிறார்கள் எதிர்ப்பலர்களில் சிலர்.