இன்று கமல் நடித்த விஸ்வரூபம்-2 படம் வெளியாகியுள்ளது. இதன் முதல் பாகம் பல பிரச்சனைகளுக்கு நடுவே வெளியாகி வெற்றி பெற்றதால் இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தது..
இந்தநிலையில் இந்தப்படத்திற்கு நேற்று எதிர்பார்த்த ஓப்பனிங் கிடைக்கவில்லை. சொல்லப்போனால் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் பண்ண இணையதளம் சென்றவர்களுக்கு எந்த தியேட்டர்களிலும் டிக்கெட்டுகள் தாராளமாக கிடைத்தன.
கமல் அரசியல் கட்சி தொடங்கியபின் அவர் படம் பார்த்து வந்த மற்ற கட்சிகளை சேர்ந்த, குறிப்பாக ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் அவருக்கு எதிரான மனநிலைக்கு மாறிவிட்டார்கள். அதுவும் கூட்டம் குறைந்ததற்கு முக்கிய காரணம்..
இன்னொரு பக்கம் முதல்நாள் காட்சிகளை கூட நிரப்பும் அளவுக்கு கமலின் ரசிகர்கள் பலம் அதாவது தொண்டர்கள் பலம் இல்லையா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. இத்தனைக்கும் விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் வெற்றி என்றபோதிலும் கூட, விஸ்வரூபம்-2 படத்திற்கு கூட்டம் வராதது ஆச்சர்யம் தன..
அதேசமயம் ரஜினியின் கபாலி படம் ரசிகர்களை ஏமாற்றியபோதும் கூட, அடுத்தாக அவரது காலா படம் வெளியானபோது முதல் நாள் அனைத்து டிக்கெட்டுகளை விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.