தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட தல, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் பொங்கல் தினத்தில் மோதி கொள்ள உள்ளன. இரண்டு பெரிய படங்களும் ஒரே நாளில் மோதிக் கொள்வதால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஸ்வாசம் பட ரிலீஸை தள்ளி வைத்து கொள்ள முடியுமா? என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்ததாகவும் ஆனால் அதற்கு விஸ்வாசம் டீம் முடியாது என மறுத்து விட்டதாகவும் சில செய்திகள் உலா வருகின்றன.
.
அதுமட்டுமில்லாமல் விஸ்வாசம் கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீசாகும், பேட்டையுடன் மோதும் எனவும் கட் அண்ட் ரைட்டாக கூறி விட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது. இதனால் இந்த இரண்டு படங்களும் பொங்கல் ரேஸில் மோதி கொள்ள போவது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
ரஜினி படத்துடன் மோதுகிறோம் என அஜித் ரசிகர்கள் பல கெத்தாக கூறிவந்தாலும், பெரும்பாலான அஜித் ரசிகர்களுக்கு வேறு ஒரு பயம் கிளம்பியுள்ளது. அதாவது ரஜினி படத்துடன் அஜித் படம் வெளியாவதால் எதிர்பார்த்த அளவு தியேட்டர்கள் கிடைக்காது.. அதனால் தியேட்டார் எண்ணிக்கை, முதல்நாள் வசூல், மொத்த வசூல் என எந்த சாதனையையும் புதிதாக படிக்கவும் முடியாது… ஏற்கனவே இருக்கும் விஜய் பட சாதனையை முறியடிக்கவும் முடியாது என்பதுதான் தான் அவர்களது பயத்திற்கு காரணம்