87 வயதாகும் கமலின் அண்ணனான சாருஹாசன் இந்த வயதிலும் கதை நாயகனாக ‘தாதா 87’ என்கிற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்துள்ளார். மேலும், ஜனகராஜ், ஆனந்த் உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்துள்ளனர்
ரெளத்திரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி தயாரித்துள்ள இந்த படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கியுள்ளார்.. மொத்தம் 12 கேரக்டர்களை உள்ளடக்கி கதையமைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் மனித மிருகங்களை வேட்டையாடும் தாதாவாக சாருஹாசன் நடித்துள்ளார்..
இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகை கௌதமி கலந்துகொண்டார். இங்கேதான் டிவிஸ்ட்டே.. ஏற்கனவே இந்தப்படததை விளம்பரப்படுத்தும் நோக்கில் தான் சில மாதங்களாக கமல், ரஜினி ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்து அதிரடியான கருத்துக்களை கூறி, தன்னை நோக்கி ரசிகர்களின் பார்வையை திருப்பவைத்தார்.
தற்போது அதே விதமாகத்தான் கமலிடம் இருந்து பிரிந்துவிட்ட கௌதமியை அழைத்து இந்த விழாவில் பங்கேற்க செய்தது சாருஹாசன் தான் என்கிறார்கள்.. இல்லையென்றால் எந்த சினிமா விழாவிலும் கலந்துகொள்ளாத கௌதமி இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன என்று சிலர் கேட்கிறார்கள். கௌதமியும் சாருஹாசன் மீது கொண்ட மரியாதை காரணமாக இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளார்.