கௌதம் மேனன் டைரக்சனில் தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஒரு படத்தை ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள்ளாக வெளியிட்டால்தான் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தோற்றத்தில் மிகப் பெரிய வித்தியாசம் இல்லாமல் இருக்கும். சிம்புவாவது படப்பிடிப்பிற்கு வராமல் டிமிக்கி கொடுத்து லேட் பண்ணுவார்.. அதனால் தாமதமாக வாய்ப்பு உண்டு.. ஆனால் தனுஷ் அப்படியில்லையே..?
இத்தனைக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை கடந்த வருடத் துவக்கத்திலேயே ஆரம்பித்தார்கள். அதன் பின் சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடத்திவிட்டு, கௌதம், அச்சம் என்பது மடமையடா படத்தை முடிக்கப் போய்விட்டார். அந்தப் படத்தை வெளியிட்ட பின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் டீசரை கடந்த வருடம் டிசம்பரில் வெளியிட்டார்கள்.
அதனால் படம் இந்த வருடத்திலேயே வந்து விடும் என்று நினைத்தால் வழக்கம் போல இந்தப்படத்தை முடிக்காமலே கௌதம், விக்ரம் நாயகனாக நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி வருகிறார். ஆனாலும் துருவ நட்சத்திரத்திற்கு முன்பாகவே தோட்டாவைப் பாய வைக்க வேண்டுமென்று இப்போது முடிவெடுத்துள்ளாராம். அதனால் எப்படியும் அடுத்த வருடத் துவக்கத்தில் தோட்டா கண்டிப்பாகப் பாய்ந்துவிடும் என்கிறார்கள். இதற்கு கருத்து வேறுபாடுகளை மறந்து தனுஷின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.