ராதிகா ஆப்தேவின் காலை தடவி அறை வாங்கிய அந்த நடிகர் யார்..?


பார்க்க அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு அடப்பாவி என வாய்பிளக்கும் வகையிலான காரியங்களை செய்து வருபவர் கபாலி நாயகியான ராதிகா ஆப்தே. இவரது நிர்வாண போஸ்கள் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரசித்தம் ஆனவை. கபாலிக்கு பிறகு இவரது ஆட்டம் ரொம்பவே கூடிவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு தர வேண்டுமென்றால் நடிகைகள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிற சூழல் இப்போதும் நிலவுவதாக அவ்வப்போது பல நடிகைகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இப்படிப்பட்ட சமயத்தில் தான் சமீபத்தில் இந்த ராதிகா ஆப்தே சமீபத்திய டிவி பேட்டி ஒன்றில் தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் போது தனக்கும் அப்படி ஒரு அனுபவம் நேர்ந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அதாவது தென்னிந்திய மொழியில் தான் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது முதல் நாள் படப்பிடிப்பிலேயே பிரபலமான ஒரு நடிகர் எனது காலைத் தடவினார். நான் கோபமடைந்து அவரை அடித்துவிட்டேன் என கூறி பரபரப்பை கிளப்பினார் ராதிகா ஆப்தே.

அவர் முதன் முதலில் தெலுங்கில் ரக்த சரித்திரா படத்தில் நடித்துள்ளார். அதன் பின் பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி படத்தில் நடித்திருக்கிறார். அதை தொடர்ந்து வெற்றிச்செல்வன் என்கிற படத்தில் சாதாரண ஹீரோவான அஜ்மலுடன் நடித்தார். ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த அவர், இறுதியாக கபாலி படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்தார். அதுமட்டுமல்ல தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்துள்ளார். மற்றபடி அவர் நடித்ததெல்லாம் இந்தி படங்கள் தான்.

தனது பேட்டியில் அந்த நடிகர் யார் என்பதை ராதிகா சொல்லவில்லை. அப்படியானால் அவரிடம் அடி வாங்கிய அந்த பிரபல நடிகர் யார் என பலரும் மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களில் யார் ஒருத்தரையும் அறைந்துவிட்டு, தொடர்ந்து அந்தப்படத்தில் ராதிகா ஆப்தே நடித்திருக்க முடியாது. ஒன்று இவர் அடித்ததால் அந்தப்படத்தில் இருந்து அவர் தூக்கப்பட்டு இருக்கவேண்டும்.. இல்லையென்றால் சும்மா பப்ளிசிட்டிக்கு இப்படி எதையாவது கொளுத்திப்போட்டால் சில நாட்களுக்கு மீடியாவில் பற்றி எரியும். அதில் குளிர் காய்ந்துகொள்ளலாம் என நினைக்கிறாரோ ராதிகா ஆப்தே..?