படக்குழுவினர் பேசியதோ கால்மணி நேரம் ; கஸ்தூரி மொக்கை போட்டது அரைமணி நேரம்.. கொடுமைடா சாமி


பொதுவாக திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்குவதற்கு என ஆண் பெண் தொகுப்பாளர்கள் ஒரு பத்து பேர் பீல்டில் இருக்கின்றனர். இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாருமே மொக்கை போடும் ரகம்தான். அதாவது மீட்டருக்கு மேல் பேசுபவர்கள்.. இன்னும் வடிவேலு பாணியில் சொன்னால் வாங்கிய காசுக்கு மேலே கூவுகின்றவர்களாகத்தான் இருக்கிறார்கள்.. மேடையில் நம் கண்முன்னே நமக்கு தெரிந்த ஒரு பிரபலம் அமர்ந்திருந்தாலும் கூட அவர் யார் என்றே நமக்கு தெரியாதது போல இரண்டு நிமிடம் தம் கட்டி அவர் பற்றி பில்டப் கொடுக்கும் தொகுப்பாளினிகள் சிலர் இருக்கிறார்கள்.. ஆனால் இப்போது புதிதாக இந்த பீல்டில் என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை கஸ்தூரியை கண்டு இவர்கள் அனைவரும் கதிகலங்கி போய் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்ளும் பத்திரிக்கையாளர்களும் தான்

ஏற்கனவே கஸ்தூரி என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது.. எந்த இடத்தில் எதை பேசவேண்டும் என்ற இங்கிதம் கூட தெரியாமல் எதையாவது பேசி வம்பில் மாட்டிக்கொண்டு பின்னர் மன்னிப்பு கேட்பது அவரது வழக்கமாகவே ஆகிவிட்டது. இதே பாணியைத்தான் தற்போது மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போதும் செய்து வருகிறார்.

அதை விட கொடுமை என்னவென்றால் படக்குழுவினர் ஒவ்வொருவரையும் இவர் அழைப்பதற்கு முன்பாக குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை பேசுகிறார் இதில் தனது சுயபுராணத்தையும் சேர்த்துக் கொள்கிறார். அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்ற ‘மாளிகை’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கஸ்தூரி பேசுவதற்கு மட்டுமே மொத்தம் 30 நிமிடங்கள் ஆனது. ஆனால் படக்குழுவினர் பேசியவை 15 நிமிடங்களுக்குள்ளேயே அடங்கிவிட்டது.

இனியாவது கஸ்தூரி போன்றவர்களை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அழைக்கும்போது ரத்தினச்சுருக்கமாக பேசச்சொல்லி அழைத்து வந்தால் நல்லது.. அவரை அழைக்காமல் விட்டால் மிகமிக நல்லது.. சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா..?