இலங்கை தமிழர் பற்றி யார் வேண்டுமானாலும் பேசிவிடமுடியாது.. அவர்களுக்கு ஆதரவாக யார் வேண்டுமானாலும் குரல் கொடுத்துவிட முடியாது என்கிற நிலை சமீபகாலமாக உருவாகிவிட்டது என்றே தோன்றுகிறது.. சமீபத்தில் இலங்கை செல்லும் தனது பயணத்தை ரஜினி ரத்து செய்துள்ளதை பாக்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது..
அவர் செய்ய இருந்தது என்ன..? லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தனது தாயார் பெயரில் இலங்கையில் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு 150 வீடுகளை கட்டியுள்ளதாகவும், அதை ரஜினிகாந்த் வந்து தனது கரங்களால் அவர்களுக்கு அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.. ரஜினி நடிக்கும் படத்திற்கான விளம்பரமாகவே இருந்தாலும் கூட, இதில் என்ன தவறு இருக்கிறது..
ஆனால் ரஜினி செய்ய நினைத்து இதை மட்டுமல்ல. இலங்கை அதிபரை சந்திக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கி, நம் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்படி வலியுறுத்தவும் முடிவு செய்திருந்தார்.. இதுநாள் வரை தன்னை திரையிலேயே பார்த்துவந்த மக்களுக்கு தன்னை நேரில் பார்க்கும் ஒரு சந்தோஷமான வாய்ப்பாகவும் இதை அவர் கருதினார்..
ஆனால் இங்கே இலங்கை பிரச்சனையை வைத்து அரசியல் செய்துவரும் திருமாவளன், ராமதாஸ், வேல்முருகன் எல்லோருக்கும் ‘இலங்கை தமிழர்களின் குத்தகைதாரர்களாக தாங்கள் இருக்கும்போது ரஜினி எப்படி இலங்கை செல்லலாம்.. அங்குள்ள மக்களுக்கோ அல்லது இங்குள்ள மீனவர்களுக்கோ நல்லது செய்யலாம் என அடிவயிற்றில் கபகபவென எரிய ஆரம்பித்துவிட்ட்டது..
உடனே அறிக்கை மேல் அறிக்கையாக வெளியிட்டு ரஜினி இலங்கை செல்லக்கூடாது என்கிற மறைமுக மிரட்டலை கோரிக்கையாக வைத்தார்கள்.. ரஜினியும் அதை ஏற்றுக்கொண்டு இப்போது சரி, ஆனால் இனிவரும் காலங்களில் நான் இலங்கை செல்லும் வாய்ப்பு இருந்தால் அதை அரசியலாக்காதீர்கள்.. நான் உங்களைப்போல அரசியல்வாதி அல்ல” என செருப்பால் அடித்த மாதிரி சொல்லிவிட்டார்..
இவர்கள் பேச்சை மீறி அவர் போக முடியும் தான்.. ஆனால் அடுத்து ரஜினிக்கு எதிராக போஸ்டர் ஓட்டுவார்கள்.. உருவ பொம்மை எரிப்பார்கள்.. ரசிகர்களை தாக்குவார்கள்.. ஏனென்றால் தமிழ்நாட்டில் தலையாய பிரச்சனை இதுதான் பாருங்கள்..
என்ன ஒன்று.. இனி இலங்கை பயணம் செல்பவர்கள் இந்த குத்தகைதாரர்களிடம் நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட் (N.O.C) வாங்கினால் தான் இலங்கை செல்லவேண்டும் என சொன்னாலும் சொல்வார்களோ..?