வெற்றிப்பட இயக்குனரை விரட்டிய 17 ஹீரோக்கள்.. 2௦ தயாரிப்பாளர்கள்..!


விஷ்ணு விஷால், அமலாபால் நடித்திருக்கும் புதிய படம் ‘ராட்சசன்’. இந்த திரில்லர் படத்தை முண்டாசுப்பட்டி வெற்றிப்படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தை பற்றி படக்குழுவினர் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

இயக்குனர் ராம்குமார் பேசும்போது, “முண்டாசுப்பட்டி படத்துக்கு பிறகு இந்த கதையை கிட்டத்தட்ட 20 தயாரிப்பாளர்கள் மற்றும் 17 ஹீரோக்களிடம் சொல்லி விட்டேன். முதல் படம் காமெடியாக கொடுத்துவிட்டதால் நான் சீரியஸ் கதையை சொன்னதும் எல்லோருமே யோசித்து சொல்கிறேன் என ஜகா வாங்கினார்கள்.

கதை அனைவருக்கும் பிடித்திருந்தது.. ஆஅனால் காமெடி படம் எடுத்த நான் இதை சரியாக பண்ணுவேனா என்கிற சந்தேகம் அவர்களிடம் இருந்தது.. எலோரும் என்னிடம் இனொரு காமெடி படத்தையே எதிர்பார்த்தார்கள். ஆனால் டில்லி பாபு சார் தான் என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார். இந்த படம் எனக்கு கிடைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அருண்ராஜா காமராஜுக்கு நன்றி.” என்றார்.