அஜித் படம் பற்றிய அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவது தெரிந்த விஷயம்.. அவரது படம் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் அது போஸ்டரோ, பர்ஸ்ட் லுக்கோ, டீசரோ என எதுவானாலும் வியாழக்கிழமைகளில் வெளியாவதும் தெரிந்த விஷயம் தான்.
அந்தவகையில் இன்று அதிகாலை 3.40 மணிக்கு விஸ்வாசம் போஸ்டரை வெளியிட்டார்கள். பொதுவாக இதுபோன்ற அறிவிப்புகளை நடுநிசி 12.01 மணிக்கு அதாவது புதிய கிழமை பிறகும் நேரத்தில் தான் அறிவிப்பார்கள்.. ஆனால் அஜித் இப்படி அதிகாலை 3.40 மணிக்கு வைத்தது ஜோதிடத்தில் கொண்ட நம்பிக்கையால் தான் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.
அதேசமயம் விடிகாலையில் போஸ்டரை ரிலீஸ் செய்து அதற்காக ரசிகர்களை இரவு முழுதும் தூங்கமால் வைத்திருக்க செய்வது எந்தவகையில் நியாயம் என அஜித்தை நோக்கி சிலர் கேள்வியை திருப்பி, சமூக வலைத்தளங்களை சூடாக்கி வருகிறார்கள்.