கார்த்திக் சுப்பராஜ் டைரக்சனில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் அல்லவா.? அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் ரஜினிக்கான ஒப்பனிங் பாடலை நீண்டநாளைக்குப்பிறகு மீண்டும் எஸ்.பி.பி பாடப்போகிறார் என்றும் சொல்லப்பட்டதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.
ஆனால் சமீபத்தில் வெளியான சிங்கிள் ட்ராக்கை கேட்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர்.. காரணம் அதில் அதிகமான பாடல் வரிகளை அனிருத்தே பாடியிருந்தார். போனால் போகிறதென்று எஸ்.பி.பிக்கு சில வரிகள் மட்டுமே கொடுத்திருக்கிறார் அனிருத். முழுப்பாடலையும் எஸ்.பி.பியே பாடியிருந்தால் செம மாஸாக இருந்திருக்கும் என புலம்புகிறார்கள் ரசிகர்கள்.