கடந்த இரண்டு வருடத்திற்கு முன் மலையாளத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமாகி, மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த அனுபமா பரமேஸ்வரன், தற்போது ஸ்திரமாக மையம் கொண்டிருப்பது தெலுங்கு திரையுலகில் தான்.
பிரேமேம் ரீமேக், சதமானம் பகவதி என அவர் நடித்த படங்கள் அங்கே வரிசையாக ஹிட்டாகவே, ராசியான நடிகை என்கிற பெயரையும் எளிதில் சம்பாதித்துவிட்டார். அதனால் அவரை தேடி நிறைய பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகள் வந்தாலும் கூட, ஒரே ஒரு காரணத்தால் வருபவர்கள் எல்லாம் உதட்டை பிதுக்கிவிட்டு செல்கின்றனர்.
காரணம் அனுபமாவின் உயரம். தெலுங்கு சினிமாவின் ஓங்குதாங்காக வளர்ந்த ஹீரோக்களுக்கு பக்கத்தில் அனுபமா நின்றால் அவர்களது சட்டை பாக்கெட் உயரத்திற்கு கூட வரமாட்டார்.. அதனாலேயே தங்களது படங்களில் அனுபமாவை நடிக்கவைக்கலாமே என நினைப்பவர்கள் கூட, இந்த உயர பிரச்சனை காரணமாக ரூட்டை மாற்றிவிடுகின்றனர்..
ராம்சரணின் ஜோடியாக ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பு அனுபமாவின் கையைவிட்டு நழுவிப்போனதும் இதனால் தானாம். இந்த விபரம் தெரியாத பலர், அனுபமா கிளாமராக நடிக்க மறுக்கிறார், அதனால் தான் அவருக்கு பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைப்பதில்லை என சொல்லி வருகிறார்களாம்.
அதனால் தானாக யாரையும் தேடிப்போய் வாய்ப்பு கேட்பதை தவிர்த்து, கதைக்காக தன்னை தேடி வரும் இயக்குனர்களின் படங்களில் மட்டும் நடிப்பதென முடிவெடுத்துள்ளாராம் அனுபமா பரமேஸ்வரன்.