வேற வழியில்லாமல் சம்மதித்த பாலா


தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படம் தற்போது தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். தமிழில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இதுவரை ரீமேக் படங்களையே இயக்காத பாலா முதன்முறையாக இந்தப்படத்தை இயக்குகிறார் என்றால் அது விக்ரமுக்காகத்தான். இந்நிலையில் இயக்குனர் பாலா, ‘வர்மா’ படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து இன்னொரு புதிய வழக்கமாக இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை வேலூரில் நடத்த இருக்கிறார்களாம்..

காரணம் பட தயாரிப்பாளருக்கு வேலூர் தான் சொந்த ஊராம். மிகப்பெரிய கோடீஸ்வரரான அவர் தன் சொந்த ஊரில் மாஸ் காட்டவேண்டும் என்பதற்காக விழாவை வெள்ளூரிலேயே நடத்துங்கள் என சொல்லிவிட்டாராம். ஆனால் பாலாவுக்கு இதில் உடன்பாடு இல்லையாம். ஆனால் இப்போதும் விக்ரம் தலையிட்டு பாலாவை சமாதானப்படுத்தியதால் வேறு வழியின்றி அவருக்காக ஒப்புக்கொண்டாராம் பாலா.