இயக்குனர் பாலா இறங்கி வந்தது ஏன்..?


வெறும் கல்லாகவே பல வருடங்களுக்கு நடித்துக்கொண்டு இருந்த நடிகர்கள் பாலா டைரக்சனில் ஒரு படத்தில் நடித்துவிட்டு வெளியே வந்தால் சிலையாக மாறும் அதிசயமும் அதை தொடர்ந்து அவர்களது சினிமா மார்க்கெட் ஏறுமுகத்துக்கு போய்விடுவதும் அவர்களின் நடிக்கும் ஸ்டைலே மாறிவிடுவதும் நமக்கு தெரிந்ததுது தான். அந்த வகையில் ஒரு அறிவிக்கப்படாத பயிற்சி பட்டறையாக விளங்குகிறார் இயக்குனர் பாலா.

விக்ரம் சூர்யா, ஆர்யா என அவரால் விமோசனம் பெற்றவர்கள் பட்டியல் நீளம்.. அவரது படம் ஓடுகிறதோ இல்லையோ, நடிப்பவர்களுக்கு புது வாழ்வு கிடைக்கிறது என்பதால் அவரது டைரக்சனில் நடிக்க பல நடிகர்கள் போட்டி போட்டார்கள்.. இன்னும் சிலரோ நம்மால் ஆகாதுப்பா என பயந்து விலகி நின்றார்கள். காரணம் பாலா நடிகர்களை நடிப்பு என்கிற பெயரில் பெண்டு நிமித்தி விடுவார் என்பதுதான்.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி வருவதுபோல் தான் தெரிகிறது சில மாதங்களுக்கு முன் இளம் நடிகர்கள் சிலரை வைத்து படம் ஆரம்பிக்கப்போவதாக பாலா அறிவித்தார்.. ஆனால் இப்போதோ ‘கீரிப்புள்ள’ யுவனை ஹீரோவாக வைத்து படம் இயக்கப்போகிறார் என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. யுவனுக்கு எப்படியோ நல்வாழ்வு அமைந்துவிடும் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் பாலா இந்த அளவுக்கு இறங்கி வந்திருப்பது அவரது தன்னம்பிக்கையின் உச்சமா..? இல்லை மற்ற நடிகர்கள் அவர் மேல் கொண்டிருக்கும் பயமா..? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.