காலா வசூல் நிலவரம் ; யாரும் கொடி பிடிக்காத காரணம் இதுதான்..!


லிங்கா படம் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது என சில திரைப்பட வினியோகஸ்தர்கள் ரஜினிக்கெதிராக கொடிபிடித்து நஷ்ட ஈடு பிச்சை கேட்டு போராட்டம் நடத்தினார்கள். ரஜினியும் இளகிய மனது காரணமாக தயாரிப்பாளரிடம் சொல்லி அவர்கள் நஷ்ட ஈட்டை செட்டில் பண்ண செய்தார். அடுத்ததாக கபாலி படத்திலும் சில முணுமுணுப்புகள் இதேபோல கேட்க துவங்கினாலும் தயாரிப்பாளரான கலைப்புலி தாணுவுக்கு உண்மையான லாப நிலவரம் தெரியும் என்பதால் யாரும் அதன்பின் வாலாட்டவில்லை.

இந்தநிலையில் சமீபத்தில் வெளியான ரஜினியின் காலா படம் தோல்வி என்றும் தயாரிப்பாளரான தனுஷுக்கு 40 கோடி ரூபாய் நட்டம் என்றும் ஒரு குரூப் திட்டமிட்டு வதந்தியை பரப்பி வருகிறது. இந்த நேரத்தில் படத்தின் தயாரிப்பாளரான தனுஷே, காலா படம் நல்ல லாபம் என கூறினார். உண்மையிலேயே படம் நட்டம் என்றால் இந்நேரம் விநியோகஸ்தர்கள் பக்கமிருந்து ஒப்பாரி சத்தம் அல்லவா கேட்டிருக்கும்..? ஆனால் ஒருவர் கூட காலாவால் தங்களுக்கு நட்டம் என கொடிபிடிக்கவே இல்லை. காரணம் படம் உண்மையிலேயே லாபத்தை தான் கொடுத்துள்ளது.

பிறரின் தூண்டுதலுக்கு செவிசாய்த்து மீண்டும் ஒரு புரளியை கிளம்பினாள் தங்களுக்கு அடுத்தடுத்து வெளியாக இருக்கும் ரஜினியின் 2.O மற்றும் தனுஷின் வடசென்னை ஆகிய படங்கள் கிடைக்காமல் போய்விடுமே என்கிற உண்மை உறைத்ததால், விநியோகஸ்தர்கள் யாரும் பொய்சொல்ல மனமின்றி வாயை மூடிக்கொண்டு விட்டனர். இதுதான் உண்மை நிலவரம்.