திலகர் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் துருவா. இவர் தற்போது நடித்துள்ள ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படம் வரும் ஜூலை-27ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்தப்படம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். கதாநாயகிகளில் ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் வீட்டிலும், அஞ்சனா ஜப்பானிலும் இருப்பதால் அவர்களால் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள இயலவில்லை.
இதுபற்றி நாயகன் துருவா பேசும்போது, ” ஹீரோயின் இல்லாம நடக்குற சினிமா பங்ஷன் இதுவா தான் இருக்கும்.. என்ன பண்றது..? ஒரு கதாநாயகி அஞ்சனா பிரேம் ஜப்பான்ல இருக்காங்க.. அவங்க கூட, கூப்பிட்டிருந்தா வந்திருப்பாங்களோ என்னவோ .. உங்களுக்கே தெரியும்.. இன்னொரு நாயகி ஐஸ்வர்யா தத்தா இப்ப பிக் பாஸ் வீட்டுல இருக்காங்க.. எப்ப வருவாங்களோ யாருக்கு தெரியும்.