ஸ்டாலினை ஏன் முதல்வராக்கவில்லை ; கலைஞரை விமர்சித்த மலையாள படம்


பொதுவாக அரசியல்வாதிகள் தங்களது வாரிசுகளை அரசியலுக்குள் இழுத்து வருவது இந்திய அரசியலில் நடைமுறையில் இருக்கும் விஷயம் தான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த கலாச்சாரம் ரொம்பவே ஊறிப்போயுள்ளது என்பதும் நமக்கு தெரிந்தது தான்.. ஆனால் இந்த வாரிசு அரசியலில் ஸ்டாலின் மட்டும் வித்தியாசமானவர் என சொல்லலாம்.

காரணம் பல அரசியல்வாதிகளின் வாரிசுகள் தடாலென அரசியலில் குதித்தவர்கள்.., இல்லையில்லை தங்களது பெற்றோரால் இழுக்கப்பட்டு, திடீர் அரசியல்வாதி ஆனவர்கள் தான். ஒரு கட்டத்தில் தங்கள் தந்தையையே கீழே தள்ளி முதல்வர் நாற்காலியில் அமர்ந்த நிகழ்வுகளையும் சில இடங்களில் நாம் பார்த்திருக்கிறோம்.. ஆனால் ஸ்டாலினை பொறுத்தவரை முப்பது வருடங்களுக்கு முன்பே அரசியலில் நுழைந்தாலும் கட்சியிலும் ஆட்சியிலும் படிப்படியாகத்தான் முன்னேற முடிந்தது.

அதிலும் துணைமுதல்வர் பதவி வரையே எட்டிப்பிடிக்க முடிந்த ஸ்டாலினுக்கு இதுவரை முதல்வர் பதவி எட்டாக்கனியாகவே இருக்கிறது.. கடந்த 2006 தேர்தல் சமயத்திலேயே ஸ்டாலினை முதல்வாரக்கி அழகுபார்த்திருக்க கலைஞரால் முடிந்திருக்கும்.. ஆனால் கலைஞருக்கு அப்படி செய்வதில் துளியும் விருப்பம் இல்லை..

இந்த நிகழ்வுகளை நேற்று வெளியான ‘கம்மார சம்பவம் என்கிற மலையாள படத்தில் அப்பட்டமாக கிழிகிழியென கிழித்திருக்கிறார்கள். சமீபத்தில் நடிகை வழக்கில் சிக்கி சிறைசென்று வந்தாரே, அந்த திலீப் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோரும் கூட இதில் நடித்துள்ளார்கள்.

இந்தப்படத்தின் கதைப்படி ஒரு கட்சியின் தலைவரான தொண்ணூறு வயது கிழவரை அரசியலில் முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் ஜெயித்தவுடன் முதல்வர் பதவியில் அமர்ந்துவிடலாம் என கனவு காணுகிறார் மகன். ஆனால் தேர்தலில் கட்சி ஜெயித்ததும், மகனை நாற்காலியில் உட்கார வைக்காமல், அந்த தள்ளாத வயதிலும் தானே முதல்வர் நாற்காலியில் அமர்கிறார் அந்த கிழவர். அதற்கு சப்பையாக ஒரு காரணமும் சொல்கிறார்.

அப்போது மகனும் கட்சியில் உள்ள இன்னொரு அரசியல்வாதியும் பேசிக்கொள்ளும்போது இவர் எப்போ சாகிறது, நான் எப்போ சி.எம் ஆகிறது என புலம்புவார் மகன்.. அதற்கு உடன் இருப்பவரோ பேசாமல் கொஞ்சநாள் கழித்து போட்டுத்தள்ளிவிட வேண்டியதுதான் என்கிறார்.. இப்படி திமுக அரசியலை நக்கலும் நையாண்டியும் செய்துள்ளார்கள் இந்தப்படத்தில். அந்த 9௦ வயது கிழவராகவும் திலீப் தான் நடித்துள்ளார்