வாய்ப்பு தேடிவந்தும் ‘மரியான்’ பார்வதி நிறைய படங்களில் நடிக்காதது ஏன்..? ; அதிர்ச்சி தகவல்


துணிச்சலான நடவடிக்கைகளுக்கும் பேச்சுக்களுக்கும் சொந்தக்காரர் தான் மலையாள நடிகை பார்வதி.. தனது பெயரின் பின்னால் உள்ள மேனன் என்கிற ஜாதிப்பெயரே தேவையில்லை என அறிவித்து, அதன்படி தன்னை பார்வதி என்றே குறிப்பிட சொன்னவர். அதேபோல எவ்வளவு ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், தனக்கு கதை பிடிக்கவில்லையென்றால் அது எந்த நடிகரோட படமாக இருந்தாலும் நோ சொல்கிற அதிரடியான நடிகை தான் பார்வதி.

அதனால் தான் அவர் வருடத்திற்கு இரண்டு படங்களுக்கு மேல் நடித்தாலே ஆச்சர்யம் என்கிற நிலை உள்ளது.. இந்நிலையில் அவர் அதிகப்படங்களில் நடிக்காததற்கு அதுமட்டுமே காரணம் இல்லை என்கிற தகவலையும் கூட ஒரு அதிர்ச்சி கரமான உண்மையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

சமீபத்திய பேட்டியில் பேசிய பார்வதி, “பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைப்பார்கள். மலையாள சினிமாவில் நான் இதை பல முறை சந்தித்துள்ளேன். பல சீனியர் நடிகர்கள், இயக்குனர்கள் நேரடியாகவே கேட்பார்கள். சினிமா என்றால் அப்படி தான் இருக்கும் என சிலர் ப்ஃரீஅட்வைஸ் செய்து என்னை அழைப்பார்கள். அப்படிப்பட்டவர்களின் படங்களை நான் நிராகரித்துள்ளேன். அப்படி செய்துதான் படவாய்ப்பு பெறவேண்டும் என்றால் அது வேண்டாம். நடிப்பதை தவிர வேறு வேலை செய்யமுடியாதா என்ன?. அதிக வருடங்கள் நான் பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததற்கு அதுதான் காரணம்” என தெரிவித்துள்ளார்.