யாரையும் குற்றம் சொல்லும் விதமாக இந்த விஷயத்தை குறிப்பிடவில்லை.. சோஷியல் மீடியாவில் ஒருசிலர் எழுப்பும் கேள்வியையே உங்கள் முன் வைக்கிறோம்.. சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது, அதில் கலந்துகொண்ட லாரன்ஸ், மாணவர்களின் போராட்டத்திற்கு உதவும் விதமாக ஒரு கோடி ரூபாய் கொடுப்பதற்கு தயார் என அறிவித்தார்.
அவ்வளவு தொகை கொடுப்பதற்கு அந்த இடத்தில் தேவை பெரிதாக இளைஎன்றாலும் கூட, பெண்களுக்கு கேரவன் டாய்லெட் வசதி, மற்றும் சாப்பாடு என ஓரளவுக்கு உதவிகளை செய்தார் என்பது மறுப்பதற்கில்லை. மறுப்பதும் நியாயமாகாது..
ஆனால் போராட்டத்தின் கடைசி நாளன்று மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர் போலீசார். இதனால் மாணவர்களுக்கு உதவும் விதமாக நடுக்குப்பம் பகுதி மீனவர்கள் களத்தில் இறங்கினர்.. ஆனால் அவர்களும் அவர்களது பகுதியும் வீடுகளும் போலீசாரின் தாக்குதலுக்கு முதல் இலக்காக மாறிப்போகின..
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஆறுதல் கூறுவதோடு நின்றுகொண்டனர். அப்போது அந்த மக்களை சந்தித்த லாரன்ஸ், பலரிடம் நிதி திரட்டி சில லட்ச ரூபாய்கள் சேர்ந்ததும் அவர்களுக்கு உதவுவதாக வாக்களித்து விட்டு சென்றாராம்.
போராட்டத்தின் போது பாதிக்கப்படாத மாணவர்களுக்காக கோடிகள் தருவதாக சொன்ன லாரன்ஸ், போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில லட்சங்களை தனது கையில் இருந்து தருவதற்கே தயங்குவது ஏன் என்பது தான் சோஷியல் மீடியாவில் பலரும் விமர்சனமாக முன்வைத்து வருகின்றனர்..
அதேசமயம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எந்த பொறுப்பிலும் இல்லாத கேப்டன் விஜயகாந்த், மற்றவர்களை போல வெறும் கையை வீசிக்கொண்டு வராமல் தன்னால் இயன்ற நிவாரணப்பொருட்களுடன் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவற்றை வழங்கி ஆறுதல் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.