சூப்பர்ஸ்டார் என்பதாலேயே அப்படித்தான் பண்ணியாக வேண்டுமா.?


கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மொத்த கேரளாவையும் வெள்ளம் புரட்டிப்போட்டுள்ளது..கேரளாவிற்கு உதவிசெய்யும் விதமாக பலரும் நிவாரண நிதி அளித்து வருகிறார்கள். அந்தவகையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் தங்கள் பங்காக நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

இதில் ரஜினி தனது பங்களிப்பாக 15 லட்சம் வழங்கியுள்ளார்.. சூர்யா-கார்த்தி 25 லட்சமும், கமல் 25 லட்சமும், விக்ரம் 35 லட்சமும் வழங்கியுள்ள நிலையில் ரஜினி 15 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளதை பலரும் விமர்சித்து வருகிறார்கள்..

ரஜினி சூப்பர்ஸ்டார் என்பதாலேயே, அதிகப்படியான சம்பளம் வாங்குகிறார் என்பதாலேயே அவர் மற்றவர்களுக்கு செய்யும் உதவியும் மிகவும் பெரியதாகவே இருக்கவேண்டும் என சிலர் எதிர்பார்க்கின்றனர்..

ரஜினியின் எதிர்ப்பாளர்கள் இதை ஊதி பெரிதாக்குகின்றனர். ஆனால் இது அவரவர் மனதை பொறுத்த விஷயம் என்பதை புரிந்துகொள்ளல், எதற்கெடுத்தாலும் அடுத்தவருடன் ஒப்பிட்டு குறை சொல்பவர்களை யாரால் திருத்த முடியும்..?