தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரி பொங்கலுக்கு முன்பே, அதாவது போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே ‘ஜல்லிக்கட்டை நடத்தவேண்டும்’ என வாய்ஸ் கொடுத்தார் ரஜினி.. ஆனால் அதன்பிறகு கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது அதுகுறித்து ரஜினி எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை..
கமல் கூட அவ்வபோது டிவிட்டர் மூலமாக சில கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதேசமயம் ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் இன்றும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுக்கவே, இதுநாள் வரை அமைதியாக இருந்த போலீஸார் வன்முறையில் இறங்க ஆரம்பித்தனர்…
மாணவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதனால் “கண்ணியமாக் போராடி வெற்றி கிடைத்து மாலை சூடும் நேரத்தில் தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். போராட்டம் வெற்றிதான்.. மாணவர்கள் கலைந்து செல்லுங்கள்” என நேற்று அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்தார் ரஜினி..
ஒருசிலர் ரஜினி இவ்வளவு நாட்களாக வாய்மூடி இருந்துவிட்டு இப்போது அறிக்கை விடுவது ஏன் என குதர்க்கமாக கூட பேசினார்கள்.. நான்கைந்து நாட்களாக ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்களுக்கு ஆதரவாக நின்று அனைத்து உதவிகளையும் செய்த லாரன்ஸின் பேச்சையே கடைசி நேரத்தில் கூட்டத்தின் ஒரு பகுதி கேட்க மறுத்துவிட்டதே.. இந்த போராட்டத்தில் ஆரம்பம் முதல் தீவிரம் காட்டி, அவசரச்சட்டம் கிடைத்ததும் போராட்ட்டத்தை கைவிடுங்கள் என கூறிய ஹிப் ஹாப் ஆதியையே துரோகி என முத்திரை குத்தினார்களே..
இந்தசமயத்தில் ரஜினி ஏதாவது ஆரம்பத்திலேயே மாணவர்களுக்கு ஆதரவாக கருத்து சொலி இருந்தால், அரசியல்வாதிகளின் டார்கெட் ரஜினியின் பக்கம் திரும்பியிருக்கும்.. போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களில் ஒரு பிரிவினர் வேண்டுமென்றே ரஜினி மீதான கருத்து தாக்குதலில் ஈடுபட்டு, போராட்டத்தின் மையப்பொருளாக ரஜினியை மாற்றி இருப்பார்கள்..
இதனை எல்லாம் உணர்ந்துதான் மாணவர்கள் போராட்டம், தன் மீதான கவனமாக திசை திரும்பிவிட கூடாது என்றுதான் ரஜினி இத்தனை நாட்கள் வாய் திறக்காமல் இருந்தார். இன்று அவர் அறிக்கை விட்டது கூடது அப்பாவி மாணவர்கள், தேவையில்லாமல் ஒரு சிலரின் சூழ்ச்சிக்கும் அதன் காரணமாக போலீசாரின் வன்முறைக்கும் ஆளாகிவிடக்கூடது என்கிற நல்லெண்ண அடிப்படையில் தான்.