மலையாள நடிகர் நிவின்பாலி தமிழில் நேரடியாக நடித்துள்ள முதல் படம் ரிச்சி. இந்த படத்தை கெளதம் ராமச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், நட்டி நடராஜ், ஸ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி பிரியா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவை, ரிச்சி படத்தில் இன்னொரு நாயகனாக நடித்துள்ள நட்டி நடராஜ் புறக்கணித்து விட்டார். காரணம், சதுரங்கவேட்டை படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் நட்டி நடராஜ். சில படங்களில் தனி ஹீரோவாகவும் நடித்துள்ள அவர் இந்த ரிச்சி படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறாராம்.
ஆனால், படத்தின் பிரமோஷன்களில் நிவின்பாலியே அதிகமாக இடம்பெற்றிருப்பதோடு, அவருக்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆடியோ விழாவின்போது கூட அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களில் நிவின்பாலியே முழுமையாக ஆக்ரமித்திருந்தார். அதோடு படத்தின் டிரைலரிலும் அவருக்கு முதலிடம் கொடுக்கப்பட்டிருந்தது
இப்படி படத்தின் பப்ளிசிட்டி தொடங்கியதில் இருந்தே நிவின்பாலியை முன்னிறுத்தியே செயல்படுத்தி வருகிறார்கள். இப்படி தன்னை ஓரங்கட்டியதால், “இன்னைக்கு வந்த மலையாள ஹீரோ பெரிய ஆளா போயிட்டாரா..?” என கொந்தளித்த நட்டி நடராஜ், ரிச்சி படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டாராம்