உயர்வு வரும்போது பணிவு வரவேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு.. அதேசமயம் எவ்வளவுதான் பிரபலமானவர்கள் என்றாலும் பெரியோர்கள் அமர்ந்துள்ள அரங்கத்தில் இளைஞர்கள் அடக்க ஒடுக்கமாக பேசுவதும் கூட மரியாதை தான் என்றும்கூட சொல்வார்கள். ஆனால் அதற்காக சூர்யா விழா மேடையில் இப்படி பேசலாமா என்று அவரது ரசிகர்களே வருத்ததுடன் கேட்டு வருகிறார்கள்.
இன்று நடைபெற்ற ‘24’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கடைசியாக மைக் பிடித்த சூர்யா கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுத்தான் பேசினார். தான் ஒன்றுமே சாதிக்காதவர் என்பதுபோலத்தான் பேசினார். ஆனால் அதற்காக அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தான் ரசிகர்களை சங்கடப்படுத்தி விட்டன… அப்படி என்ன பேசினார்..?
“நான் ஒன்னும் பெரிய ஆளு இல்லைங்க.. நான் ஒரு தற்குறி, டம்மி பீசு என்கிற வார்த்தைகளை சூர்யா பயன்படுத்தி தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டதை பெரும்பாலானோர் ரசிக்கவில்லை. அடுத்ததாக, தன படம் நன்றாக இருந்தால் மட்டும் அதை ஓட வைக்குமாறும், நல்லா இல்லாவிட்டால் ஆதரிக்க வேண்டாம் என்று சொன்னது இன்னும் ஷாக்.
பணிவு என்றாலும் அதற்காக இப்படியா..?