விஸ்வாசம் கேரளாவில் குறைவாக விலை போனது ஏன்..?


வரும் ஜனவரி 10ஆம் தேதி அஜித் நடித்த விஸ்வாசம் படம் வெளியாகிறது கேரளாவிலும் இந்த படம் வெளியாக உள்ளது ஆனால் இந்த படத்தின் கேரள வெளியீட்டு உரிமை வெறும் இரண்டரை கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டுள்ளது உள்ளது வழக்கமாக அஜித் படங்கள் 4 கோடி வரை கேரளாவில் விலை போகும்.

கடந்த முறை வெளியான அஜித்தின் விவேகம் படம் கூட மூன்றரை கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் அந்த படத்தை வாங்கி வெளியிட்ட வெளியீட்டாளருக்கு அதில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டது தற்போது விவேகம் படத்தை தயாரித்த அதே சத்யஜோதி பிலிம்ஸ் தான் விஸ்வாசம் படத்தையும் தயாரித்துள்ளனர்.

அதேபோல விவேகம் படத்தை கேரளாவில் வெளியிட்ட அதே வெளியீட்டாளர் தான் விஸ்வாசம் படத்தையும் கேரளாவில் வெளியிடுகிறார் அதனாலேயே அந்த படத்தின் நஷ்டத்தை அவருக்கு ஈடுகட்டும் விதமாக ஒரு கோடி ரூபாய் குறைத்து வழங்கியுள்ளார்கள் என்று தயாரிப்பாளர் வட்டாரத்தில் பேசப்படுகிறது