தல அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. தல அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டாலும் அஜித்துக்கு ரசிகர்கள் அதிகரிப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில் விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராத தந்தையை மகனே நெருப்பு வைத்து கொளுத்திய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் விஸ்வாசம் படத்தின் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும்போது, கட்டவுட் சரிந்து விழுந்ததில் தல ரசிகர்கள் 6 பேருக்கு மேல் காயமடைந்தனர். அதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தும் தல காதுக்கு சென்றுள்ளதாகவும், தல சொன்னால் நிச்சயம் அவரது ரசிகர்கள் கேட்பார்கள் என்பதால் இந்த விவகாரம் குறித்து அஜித் கருத்து தெரிவிப்பாரா? தனது ரசிகர்களை கண்டிப்பாரா என பலதரப்பில் இருந்து கேள்விகள் குவிகின்றன. நிச்சயம் அஜித்திடமிருந்து ஒரு வார்த்தை வெளியானால் போதும்.. அவரது ரசிகர்கள் கட்டுப்படுவார்கள் என்பது மட்டும் நிச்சயம் என்கிறார்கள் சமநிலை காக்கும் மற்ற அஜித் ரசிகர்கள்.