நடிகை பாவனா கடத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்படு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் திலீப் கைதுக்கு பின் போலீசாரின் விசாரணைக்கோ அல்லது தானும் கைது செய்யப்படலாம் என பயந்தோ காவ்யா மாதவன் தலைமறைவானதாகவும் ஒரு தகவல் வெளியானது..
ஆனால் காவ்யா மாதவன் அவரது வீட்டில் தான் இருக்கிறார் என்பதை நேற்று அவரது வீட்டில் நடைபெற்ற போலீஸ் விசாரணை உறுதி செய்துள்ளது. வழக்கில் நடிகை சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் அடங்கிய மெமரி கார்டை காவ்யா மாதவனுக்கு சொந்தமான கடையில் ஒப்படைத்ததாக முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் கூறியதை அடுத்து காவ்யா மாதவனும் போலீசின் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காவ்யா மாதவனிடம் அவரது வீட்டிற்கே சென்று ஏடிஜிபி சந்தியா ஆறுமணி நேரம் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் காவ்யா மாதவனின் பதில்களில் போலீஸார் அவ்வளவாக திருப்தி அடையவில்லை என்றும், மீண்டும் ஒருமுறை ஆலுவா போலீஸ் கிளப்பிற்கு காவ்யா மாதவனை வரவழைத்து விசாரணை நடத்த இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அனேகமாக இந்த புதிய விசாரணையில் காவ்யா மாதவன் ஏதாவது சொல்லத்தெரியாமல் சொல்லி சிக்கினால், கைது செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.