கமலின் நிலைமை தான் விஜய்க்கும் ஏற்படுமோ..?


விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் டைட்டில் சம்பந்தமான பிரச்சனை கூட முடிவுக்கு வந்துவிட்டது.. ஆனால் தமிழக அரசின் வரிவிதிப்பை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கம் படங்களை ரிலீஸ் செய்ய கூடாது என எடுத்துள்ள முடிவால் மெர்சல் படம் ரிலீசாகுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஒருவேளை இதே நிலை நீடித்தால், குறிப்பிட்ட தேதியில் மற்ற மாநிலங்களில் மெர்சல் படம் ரிலீசானாலும் தமிழ்நாட்டில் ரிலீஸாக வாய்ப்பு இல்லை என்பதே நிதர்சனம்… அதனால் விஜய் படம் பார்க்கவிரும்பும் ரசிகர்கள் பக்கத்து மாநிலங்களுக்குத்தான் படையெடுக்க வேண்டிய நிலை உருவாகும்.

கமலின் விஸ்வரூபம் படம் வெளியான சமயத்தில் இங்கே பிரச்சனையை சந்தித்தபோது மற்ற மாநிலங்களில் படம் ரிலீசானது ஞாபகம் இருக்கிறதா..? அதே நிலைதான் விஜய் படத்துக்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.