தமிழ்நாடே 5 மாநில தேர்தல் முடிவுகளை பற்றியும் பிஜேபிக்கு கிடைத்த மரண அடி பற்றியும் பரபரப்பாக பேசிவருகிறது. இந்த களேபரங்களுக்கு மத்தியில் கூட, அதிரடிக்கு பெயர்போன ரங்கராஜ் பாண்டே, தந்தி டிவியில் இருந்து விலகியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு ‘கேள்விக்கு என்ன பதில்’ நிகழ்ச்சியில் தனது அதிரடியான கேள்விகளால் நேர்காணலுக்கு வந்தவர்களை தெறிக்கவிட்டவர் தான் இந்த பாண்டே. இவரிடம் வாயைக்கொடுத்து தங்கள் அறியாமையையும் உண்மை முகத்தையும் மக்களிடம் வெளிபடுத்தி கேவலப்பட்டவர்கள் பட்டியல் ரொம்ப பெரிது.
அப்படிப்பட்ட பாண்டே, தந்தி டிவியின் முக்கிய தூணாக இருந்த பாண்டே திடீரென ஏன் விலகினார் என்கிற விஷயம் பலராலும் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. ஏன் விலகினேன் என்று அவரே விளக்கம் அளித்த பிறகும் பாண்டேவை சுற்றிவரும் வதந்திகள் நின்றபாடு இல்லை. இந்நிலையில் ரங்கராஜ் பாண்டே ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் அரசியல் ஆலோசகராக இடம்பெற போவதாக தகவல்கள் பரவி வருகிறது.
ரஜினி ஆரம்பிக்கும் கட்சியில் பாண்டே இணைய வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பேசப்பட்டு வருகிறது. பாண்டே ரஜினி கட்சியில் இணைகிறாரா இல்லை புதிதாக ஏதேனும் ஊடகம் ஆரம்பித்து இடம்பெற போகிறாரா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்