விவேகம் விமர்சனம் ; புளூ சட்டை மாறன் விரைவில் கைது…?


ஒரு படம் ரிலீசாவதற்கு முன்னால் வெளியாகும் செய்திகள் மூலம் படம் குறித்த எதிரபார்ப்புகள் அதிகமாவது உண்மை தான். ஆனால் அதேசமயம் அந்தப்படம் வெளியான பின்னர் வரும் விமர்சனங்கள் தான் தியேட்டருக்கு கூட்டம் வரவைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.. அது பேப்பர், டிவி சேனல், வலைத்தளம் ஆகியவற்றையும் தாண்டி தற்போது யூடியூப், வாட் அப், பேஸ்புக், ட்விட்டர் என எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்..

ஆனால் ஒரு படத்தில் குறைகள் நிறைய இருந்தாலும் சில நிறைகளும் இருக்கத்தான் செய்யும்.. அதையும் சுட்டிக்காட்டுவதுதான் நடுநிலையான விமர்சனம்.. அனால் கடந்த பல மாதங்களாகவே யூடியூப்பில் புளூ சட்டைக்காரன் என அழைக்கப்படும் மாறன், ரிலீசாகும் படங்களை மிகவும் கேவலமாக விமர்சித்து வருகிறான்..

அப்படித்தான் கடந்த வியாழனன்று வெளியான அஜித் நடித்த விவேகத்தை தனது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக படு மோசமாக விமர்சித்துள்ளான்.. இது அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது, திரையுலகினரிடமும் மிகுந்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது..

இது குறித்து விளக்கம் கேட்டு மாறனிடம் போன் செய்து அமைதியான முறையில் பேசும் ஒரு ரசிகரிடம், அஜித்தை அவன், இவன் என ஏக வசனத்தில் பேசியதுடன், ‘அந்த ‘தே…யா’ பையனுக்கு நீ என்ன வக்கலாத்து வாங்குற’ என அநாகரிகமான வார்த்தைகளில் திட்டியும் உள்ளார்..

இதுகுறித்து பலரும் நடிகர்சங்க தலைவர் விஷாலிடம் புகாராக தெரிவித்துள்ளனர். விஷாலும் புளூ சட்டைக்காரன் மீது விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.. தகாத வார்த்தை பேசிய காரணத்திற்காக புளூ சட்டை மாறன் விரைவில் கைதாவான் என்றே பரவலாக பேசிக்கொள்ளப்படுகிறது.