யாஷிகா கிளப்பிய மீ டூ சர்ச்சை ; வெளிநாட்டில் இருந்து சிம்பு ரிட்டர்ன்


பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மி டூ என்ற பிரச்சாரம் ஒன்று இந்தியா முழுவதும் சூடு பிடித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுயை மீ டூ (அதாவது நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்) என்று பதிவிட்டு வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூற, விவகாரம் பெரிதானது. இதை தொடர்ந்து இன்னும் சில பெண்கள் தங்கள் மீ டூ அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், சினிமாவில் எனக்கும் பாலியல் சீண்டல்கள் இருந்தன. பிரபல இயக்குனர் ஒருவர் என்னை படுக்க அழைத்தார் என்று பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து யாஷிகா செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒரு பெரிய இயக்குனரின் படத்தில் நடிக்க வாய்ப்புக் கேட்டு நான் சென்றிருந்தேன். அவர் ஒரு பிரபல ஹீரோவின் தந்தையும் கூட. அப்போது, ‘ஒருநாள் இரவு அவருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால், வாய்ப்புத் தருகிறேன்’ என்று எனது தாய் மூலம் அந்த இயக்குனர் சொல்லி இருக்கிறார். ஆனால், அந்த இயக்குனர் யார் என்று சொல்ல விரும்பவில்லை. ஏனெனில், என்னிடம் நேரடியாக அவர் இதை கேட்கவில்லை. எனவே மீ டூ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். சினிமா துறை மட்டுமில்லாது, எல்லா துறையிலும் இதுபோன்ற பாலியல் தொல்லைகள் இருக்கின்றது” என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.

பிரபல ஹீரோவின் தந்தை, அதிலும் அவர் ஒரு இயக்குனர் என யாஷிகா குறிப்பிட்டுள்ளதை தொடர்ந்து, அவர் புகார் சொன்னன நபர் யாராக இருக்கும் என்கிற சந்தேக வட்டம் குறுகியுள்ளது..

இந்தநிலையில் ஜார்ஜியாவில் சுந்தர்.சியின் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்த சிம்பு திடீரென சில நாட்கள் லீவு போட்டுவிட்டு சென்னை திரும்பியுள்ளாராம். யாஷிகா மீ டூ சர்ச்சை குறித்து கூறியுள்ளதும், ஆவர் சமீபத்தில் சிம்பு கேங்கில் இணைந்துள்ளதும், தற்போது சிம்பு வெளிநாட்டில் இருந்து கிளம்பி வந்துள்ளது என அனைத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என பலர் பேசிக்கொள்கிறார்கள்.