பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் என்கிற அடையாளத்துடன் அறிமுகமானாலும், தனக்கென ஒரு தனிப்பாதையை வகுத்து, தமிழ்த் திரையுலகில் கடந்த இருபது ஆண்டுகளாக வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவரது திரையுலக வாழ்க்கை சக்சஸ் ஆக இருந்தாலும் திருமண வாழ்க்கை என்னவோ அவ்வளவு திருப்திகரமாக அமையவில்லை.
கடந்த 2005ம் ஆண்டு சுஜாயா என்கிற பாடகியை காதல் திருமணம் செய்த யுவன், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு லண்டனைச் சேர்ந்த ஷில்பா என்பவரை 2011ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் இந்த திருமண பந்தமும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு, ஷில்பா இவரை பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.
தனது அம்மாவின் மரணம், இரண்டாவது மனைவியுடன் சலசலப்பு என மிகுந்த மனக்கஷ்டத்தில் இருந்த யுவன், திடீரென இஸ்லாம் மதத்துக்கு மாறினார். மதம் மாறியவுடன் யுவன் தனது பெயரைக் கூட அப்துல் ஹாலிக் என்று மாற்றிகொண்டார். இந்நிலையில் யுவனுக்கும் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த சப்ரூனுக்கும் நட்பு ஏற்பட்டு,. இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் கீழக்கரையில் நேற்றிரவு ரகசியமாக திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் யுவன் தரப்பில் அவரது சகோதரியான பவதாரணி அவரது கணவர் சபரி மட்டுமே கலந்துகொண்டனரே தவிர, யுவனின் தந்தை இளையராஜா உட்பட அவரது குடும்பத்தினர் யாருமே கலந்து கொள்ளவில்லை. இவ்வளவு ரகசியமாக ஏன் திருமணம் நடிக்கவேண்டும்..? இளையராஜாவுக்கு இதில் உடன்பாடு இல்லையா என்றெல்லாம் திரையுலகிலும் ரசிகர்களிடத்திலும் பேச்சு நீண்ட நாட்களாகவே ஓடிக்கொண்டு இருக்கிறது.
கடந்த ஓரிரு வருடங்களாக யுவன் தனது பட இசை விழாக்களிலோ, அல்லது போது நிகழ்ச்சிகளிலோ கலந்துகொள்வதை தவிர்த்துவந்தார். காரணம் தனது மாத மாற்றம், மூன்றாவது திருமணம் பற்றி தேவையில்லாம கேள்விகள் கேட்பார்கள் என்பதால் தான். இந்த நிலையில் இன்று குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை சந்திக்க முடிவு செய்திருக்கிறார் யுவன்.
அந்தப்பத்திரிகையலர்களின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு நேற்றிரவு முதல், ஒவ்வொருவருக்காக தனித்தனியாக போன் செய்து, இன்று நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் தன்னிடம் சினிமா குறித்த கேள்விகளை மட்டும் கேட்கவேண்டும் என்றும் சொந்த விவாகாரங்கள் பற்றி கேள்விகள் வேண்டாம் என ஒரு ரெடிமேட் பிரஸ்மீட்டிற்கு வழிவகை செய்துள்ளார்.
குறிப்பாக இளையராஜா ஏன் அவரது திருமணத்துக்கு வரவில்லை, அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையா என்பது பற்றியெல்லாம் எதுவும் கிளறவேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்து வருகிறார். ஆனால் பத்திரிகையாளர்கள் சும்மாவே காட்டென்று காட்டுவார்கள்.. யுவன் வேறு, சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல இப்படி சொல்லிவிட்டதால் பரபரப்பான கேள்விகளுடன் யுவனை சந்திக்க தயாராகி வருகின்றனராம்.