ராமய்யா சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஓசூர் எம். ராமய்யா அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “காதல் அகதி”. ஹரிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆயிஷா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் பாண்டியராஜன், பிளாக்பாண்டி, தேவதர்ஷினி, சிங்கமுத்து, மைசூர் மஞ்சுளா, மனோகர் திருச்சி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இன்னொரு நாயகன், நாயகியாக சுதர்சன், மம்தா நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஷ்யாம்ராஜ்
இசை – பர்கான் ரோஷன்
கலை – பத்மநாபன் / எடிட்டிங் – அஹமத் / நடனம் – ராதிகா ஸ்டன்ட் – மிரட்டல் செல்வம் / பாடல்கள் – விவேகா
தயாரிப்பு மேற்பார்வை – கார்த்திகேயன் / நிர்வாக தயாரிப்பு – சிவகுமார்
தயாரிப்பு – ஓசூர் எம்.ராமய்யா
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ஷாமிதிருமலை
படம் பற்றி இயக்குனர் ஷாமிதிருமலையிடம் கேட்டோம்..
படத்தின் முக்கியமான ஸ்டன்ட் காட்சி ஒன்றை பரபரப்பான லொக்கேசனில் படமாக்கினோம்.
ஓசூர் அருகே பத்ரகாசி என்ற ஊரில் சமணர்கள் பயன்படுத்திய குகை ஒன்று உள்ளது. அந்த குகையின் நுழைவு வாயில் ரொம்பவும் சின்னது. ஒரு ஆள் உள்ளே போவதே ரொம்பவும் கடினம். ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளே போனால் நூறு பேர் இருக்கக் கூடிய குகை. காற்று வராது, வெளிச்சம் வராது. அங்கே ஹரிகுமார் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை நான்கு நாட்கள் எடுத்தோம்.
நூற்றுக்கு மேற்பட்ட தீவட்டியை கொளுத்தி அந்த வெளிச்சத்தில் தான் படமாக்கினோம். தீவெட்டி வெளிச்சக் சூடு, காற்று வசதி இல்லாத சூழ்நிலை இதையெல்லாம் மீறி எல்லோரும் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நிறையபேர் மூர்ச்சையாகி கீழே விழுந்தார்கள்.
எல்லா பிரச்னைகளும் அந்த ஸ்டன்ட் காட்சியை திரையில் பார்த்தபோது போயே போச்சு பிரமிப்பாக இருந்தது என்றார். படம் விரைவில் திரைக்கு வருகிறது.