முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. தங்களது டுவிட்டர் பக்கத்தில் இருவரும் இணைந்து இருப்பது போன்ற படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையல் நேற்று மாலை கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு இருவரும் வந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நயன்தாராவை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியதால் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர், போலீசார் நயன்தாராவையும், விக்னேஷ் சிவனையும் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து காரில் அனுப்பி வைத்தனர்.