பரபரப்பான படங்கள் வரிசையில் இணையும் நோக்கில் உருவாகவுள்ள படம்தான் இந்த ‘0 முதல் 1 வரை’.இதன் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் யாசின். இவர், சினிமாவில் உதவி இயக்குநர் , விளம்பரப் படங்களில் இயக்குநர் எனப் பரவலான அனுபவங்களுடன் இப்படத்தின் மூலம் இயக்குநராகத் திரையில் கால் பதிக்கிறார். இப்படத்தை சிங்கு பிங்கு புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘0 முதல் 1 வரை’ படம் பற்றி இயக்குநர் யாசின் பேசும்போது, ’’இது ஒரு த்ரில் மற்றும் காதல் ஆக்சன் என கலந்து கட்டிய கதை..
ஹரீஷ் – ரிச்சர்ட் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்க அனைத்து தகுதிகளும் கொண்ட நடிகர்கள். ஒரு வெற்றி இவர்களை மக்கள் மத்தியில் கொண்டு போய் நிறுத்திவிடும். அதற்கான அடித்தளத்தை இந்த ‘0 முதல் 1 வரை’ படம் செய்யும்”, இதில் மூன்று தலைமுறைக் கதைகள் வரும்; கிராமம், நகர்ப்புறம், மாநகரம் என்று மூன்று விதமான பின்னணிகள் வரும்; எழுபதுகள், தொண்ணூறுகள், நடப்புக்காலம் என மூன்று விதமான காலகட்டங்கள் வரும்.
வித்தியாசமான கதைக்களத்தில் புதிய திரைக்கதை யுக்தியுடன் இப்படம் உருவாக உள்ளது. ஹரீஷ் – ரிச்சர்ட் இவர்களுடன் முன்னணி முகங்கள் பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்” என்கிறார் இயக்குநர் யாசின்.
கிராமம் நகரம், மாநகரம் என்று வருகின்ற ஊர்ப் பின்னணிகளுக்கு ஏற்ப மதுரை, ஆண்டிப்பட்டி. சென்னை என்று படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
இந்தப்படத்தின் மூலம் சபீர் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் சிங்கப்பூரில் இசைப்பள்ளி வைத்துள்ளார். ஆல்பங்களும் உருவாக்கியுள்ளார். இசை நுட்பத்துடன் ஒலி நுட்பமும் அறிந்தவர். . பாடல்கள் விவேகா, தனிக்கொடி.
ஒளிப்பதிவு பாபு குமார் ஐ.இ. இவர் ‘ஜீரோ’ படத்தின் ஒளிப்பதிவாளர்.படத்திற்கு வசனம் இயக்குநர் கே.எஸ்.நீலன். ஸ்டண்ட் அமைப்பவர் சக்தி சரவணன் .இவர், ‘பிச்சைக்காரன்’ ‘ஜில் ஜங் ஜக்’ படங்களின் ஸ்டண்ட் மாஸ்டர்.
இதன் கலை இயக்குநரான எஸ்.ராஜா மோகன் ‘மான் கராத்தே’,,’வலியவன்’, ‘கெத்து’ படங்களில் பணியாற்றியவர்.எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’படத்தில் பணியாற்றிய கே. எம். ரியாஸ் படத்தொகுப்பு செய்கிறார்.
அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பை வித்தியாசமான கண்ணோட்டத்தில் அலசி ஆராயும் ஒரு புதிய முயற்சிதான் இந்த ‘0 முதல் 1 வரை’ படம்.
பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளனர்.. ஒரே கட்டத்தில் தொடங்கி 45 நாட்களில் முடிக்கவுள்ளனர்.