விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் ’96’ அந்தமானில் படப்பிடிப்பு!


ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் விஜய் சேதுபதி – திரிஷா நடிக்கும் ‘ 96’ என்ற படத்தை தயாரிக்கிறார். மற்றும் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம்
இசை – கோவிந்த் மேனன்
எடிட்டிங் – கோவிந்தராஜ்
கலை – வினோத் ராஜ்குமார்
பாடல்கள் – உமாதேவி, கார்த்திக் நேத்தா.

எழுத்து, இயக்கம் – C.பிரேம்குமார். இவர் பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படதின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்

இந்த படத்தின் துவக்க விழா ஜுன் 12 ( இன்று ) சென்னையில் நடைபெற்றது விழாவில் நாயகன் விஜய்சேதுபதி, நாயகி திரிஷா, இயக்குனர் பிரேம்குமார், தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால், ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம், இசையமைப்பாளர் கோவிந்த் மேனன், பாடலாசிரியர் உமாதேவி மற்றும் இயக்குனர் லஷ்மன், இசையமைப்பாளர் பைசல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அந்தமானில் விஜய்சேதுபதி, திரிஷா சம்மந்தப்பட்ட முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

அத்துடன் கல்கத்தா ராஜஸ்தான் பாண்டிச்சேரி கும்பகோணம் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
ஜனரஞ்சகமான படமாக 96 உருவாக உள்ளது.