மீம்ஸை ஜாலியாக எடுத்துக் கொள்ளும் நடிகை !


மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. அதன் பின்பு மெர்குரி படத்தில் நடித்தார். மகாமுனி படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை இந்துஜா, சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய்யின் பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிகில் திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கும் அதே வேளையில் அவரைப் பற்றிய கிண்டல்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இதுபற்றி பேசிய நடிகை இந்துஜா,

“நான் ஷூட்டிங்கில் விக் வைத்து தான் நடித்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களே என்னை கலாய்த்துகொண்டு தான் இருந்தார்கள். நான் அதை ஜாலியாக எடுத்துக்கொண்டேன்”

என்று கூறிய இந்துஜா

”தற்போது சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸ்களை பார்த்து என்ஜாய் செய்கிறேன், எப்படி இருந்தாலும் அவர்கள் படத்தை விளம்பரம் தான் செய்கிறார்கள்”
என்றும் கூறியுள்ளார்.