தற்போது சினிமாவிற்கு அடுத்தபடியாக வெப் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றன. இந்தியில் ஆரம்பித்த வெப் தொடர்கள் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கிலும் பரவி வருகின்றன. திரையுலக பிரபலங்கள் பலரும் தொடர்களில் நடித்து வருகின்றனர்.
சத்யராஜ், பிரசன்னா, பாபிசிம்ஹா, நித்யாமேனன், பிரியாமணி, மீனா, தமன்னா இந்தி நடிகர்கள் அக்ஷய்குமார், அர்ஜுன் ராம்பால், ஜாக்கி ஷாரப். அபிஷேக் பச்சன், நவாஜூதின் சித்திக், விவேக் ஓபராய், நடிகைகள் கியூமா குரோஷி, கியாரா அத்வானி ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் வெப் தொடரில் நடிக்க உள்ளார். மற்றொரு வளர்ந்து வரும் நடிகரான கதிரும் வெப் தொடரில் நடிக்க உள்ளார்.
இவர்கள் நடிக்கும் வெப் தொடரை புஷ்கர் காயத்ரி இயக்குகின்றனர். இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.