இன்றைய சூழலில் யாருக்கு யார் பாதுகாப்பு என்கிற கேள்வி உள்ளது. அந்த அளவுக்கு சமூக விரோதிகளின் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது.
மனிதன் மிருகமாவது என்பது ஒரு நிமிட நேரத்தில் ஏற்படும் உளவியல் தாக்கம் தான்.அந்த ஒரு நிமிடம் பலரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது .
பாதுகாப்பற்ற பதற்றமான இன்றைய காலக்கட்டத்தில் மன அழுத்த நெருக்கடிகளால் ஒரு சாதாரண குடிமகன் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டால் என்னாகும் என்பதே ‘அந்த ஒரு நிமிடம் ‘குறும் படம்.
இப்படத்தை ராஜேஷ் பத்மநாபன் இயக்கியுள்ளார்.
மோகன் நாராயன், ஸ்ரீதர் .மதனகோபால் ,ராஜேஷ்பத்மநாபன் , ஹரி , விஜய் , ராஜேஷ்வரன் பிரகாஷ் , வருண் ராஜேஷ் , பத்மநாபன் , கிருஷ்னா ,அரவிந் நடித்துள்ளனர்.
இக் குறும்படத்துக்கு ஒளிப்பதிவு – ராஜ்குமார் , இசை – ஷாஜகான் , எடிட்டிங் – விது ஜீவா .இ ணை இயக்கம் – பாலமுரளி கிருஷ்ணா, அரவிந் பழனியப்பன் .
தயாரிப்பு Two Reel Cinemas.& Filter Coffee productions . இவற்றின் சார்பில் வசந்தி பத்மநாபன் மற்றும் சுஜாதா ராஜேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் பத்மநாபன் ‘மீரா 10 Th 87 batch ‘என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். ‘ருசி கண்ட பூனை ‘என்ற குறும்படத்தை Two Reel Cinemas மூலம் தயாரித்துள்ளார்.
‘அந்த ஒரு நிமிடம் ‘ குறும்படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.பாண்டியராஜன் வெளியிட்டுப் பாராட்டு தெரிவித்தார். நடிகர் ‘லொல்லு சபா ‘ஜீவா படம் பார்த்து விட்டுப் படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.